
| Movie Name | Kaalangalil Aval Vasantham (2022) |
|---|---|
| Director | Raghav Mirdath |
| Star Cast | Kaushik Ram, Anjali, Heroshini |
| Music | Hari S R |
| Singer(s) | Chinmayee Sripada |
| Lyricist | Abi |
| Music Label | Tips Tamil |
தனிமை சிறையிலே வாழும்
அன்றில் பறவையாய்
ஒரு மெழுகாய்… இளகி உருகினேன்
உன் காதல் தேசத்தின்
மழையில் நனைந்த பறவையாய்
உன் குடை தேடி… நானும் அலைகிறேன்
யாவும் நீயாக ஆனாயடா
உன் வாசம்… என் சுவாசமே
இன்று ஏன் என்னை… நீ நீங்கினாய்
கற்றோடு சருகாகிறேன்
முதல்முறை ஒரு பிரிவின்
வலி தாங்க நெஞ்சம்
உறைந்திடும் தினம்
இரவுகள் கனவா
நிஜம் நிஜம்… என தெரிந்ததும்
மனம் தாழ்மை தாவா
நடந்தது என்ன
நடப்பது என்னவோ, உயிரே
மறையும் பிறயுமாய்… என் நிலை
இருளும் வானிலை
வர்ணம் நீ வரைந்திட
விழிகளில் வலியும் கனவுகளும்
கலங்கிட நீ என்னை வரைந்திடடா
வார்த்தை இல்லையே
உயிரில் ஓசை இல்லையே
இன்று நானாக நானும் இல்லையே
புல்லின் நுனியிலே
வாழும் ஒற்றை பனித்துளி
நீ வரும் பாதை பார்த்து நிற்கிறேன்
யாவும் நீயாக ஆனாயடா
உன் வாசம் என் சுவாசமே
இன்று ஏன் என்னை நீ நீங்கினாய்
காற்றோடு சருகாகிறேன்
முதல்முறை ஒரு பிரிவின்
வலி தாங்க நெஞ்சம்
உறைந்திடும் தினம்
இரவுகள் கனவா
நிஜம் நிஜம் என தெரிந்ததும்
மனம் தாழ்மை தாவா
நடந்தது என்ன
நடப்பது என்னவோ, உயிரே
Thanimai Sirayiley song is from the Kaalangalil Aval Vasantham movie.
Thanimai Sirayiley song was sung by Chinmayee Sripada.
Thanimai Sirayiley song lyrics were written by Abi.
Thanimai Sirayiley song music was composed by Hari S R.