
| Movie Name | Thullatha Manamum Thullum |
|---|---|
| Director | Ezhil |
| Star Cast | Vijay, Simran |
| Music | S A Raj Kumar |
| Singer(s) | Hariharan, Chitra |
| Lyricist | Vairamuthu |
| Music Label |
தொடு தொடு வெனவே
வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்ஙனம் காப்பாய்
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுவா… நான் சத்தியம் செய்யவா
தொடு தொடு வெனவே
வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
இந்த பூமியே தீர்ந்து போய் விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்
நட்சத்திரங்களை தூசு தட்டினால்
நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகி ப்போய்விடில் என் செய்வாய்
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் னுயிர் தந்தே உயிர் தருவேன்
ஏ ராஜா… இது மெய்தானா
ஏ பெண்ணே… தினம் நீ செல்லும்
பாதையில் முள் இருந்தால்
நான் பாய்விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை
தொடு தொடு வெனவே
வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சல் அடிக்க
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லி ராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை… அன்பால் வென்றாய்
ஏ ராணி… அந்த இந்திரா லோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாளொரு பூ வீதம்
உன் அன்பு அது போதும்
தொடு தொடு வெனவே
வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே எனை எங்ஙனம் காப்பாய்
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுவா… நான் சத்தியம் செய்யவா
Thodu Thodu Enave song is from the Thullatha Manamum Thullum movie.
Thodu Thodu Enave song was sung by Hariharan, Chitra.
Thodu Thodu Enave song lyrics were written by Vairamuthu.
Thodu Thodu Enave song music was composed by S A Raj Kumar.