
| Movie Name | Kolai, Sid Sriram |
|---|---|
| Director | Balaji Selvaraj |
| Star Cast | Vijay Antony, Ritika Singh, Meenakshi Chaudhary |
| Music | Girishh Gopalakrishnan |
| Singer(s) | Sid Sriram |
| Lyricist | Karthik Netha |
| Music Label | Think Music India |
நீர்குமிழோ நெடுங்கனவோ
தீயினில் விழும்… பொன்தூறல் இவ்வாழ்வோ
ஏன் பிரிவோ… எது முடிவோ
நீரின் மூழ்கும் மண்பொம்மைகள் நாமோ
ஓசை இல்லாமல்… உறவும் இல்லாமல்
ஊமை என் நெஞ்சின்… தாலாட்டும் நீயோ
தூதும் இல்லாமல்… தனிமை தாங்காமல்
கூண்டுக்குள் மூச்சுவிடும்… தென்றல் நீயோ
தீராத காற்றில்… உனை மாறாத நேற்றில்
அடைத்தேனே துடித்தேனே அழகே, ஓ ஓ ஓ
மாயாத நோக்கில்… புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே உயிரே, ஓ ஓ ஓஓ
ஆஆ ஆஆ… ஓ ஓ ஓஓ
யார் வலையோ… எவர் இரையோ
இரைச்சலின் உள்ளாடும்
பாடல்கள் நாமோ
யார் பிழையோ… எது சரியோ
கானலின் நீருக்குள்
விண் மீன்கள் நாமோ
வானம் செல்ல… நீயும் கேட்டாயே
அன்பெனும் தூண்டில் தனில்
நான் உன்னை மாட்டி வைத்தேன்
விடுதலை கேட்கிறாய்
வலியுடன் பார்கிறாய்
எதை எதை… நான் நான் செய்ய
தீராத காற்றில்… உனை மாறாத நேற்றில்
அடைத்தேனே துடித்தேனே அழகே, ஓ ஓஓ
மாயாத நோக்கில்… புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே உயிரே, ஓ ஓ ஓஓ
ஓ ஓ ஓஓ… ஓ ஓ ஓஓ
பேர் இசையே… பெரு நிலையே
ஈரங்கள் காயாத… ஏகாந்தங்கள் நீயே
மீ மிசையே மிகுமதியே
மார்பினில் மாறாத
வாசங்கள் நீயே
பேர் இசையே… பெரு நிலையே
ஈரங்கள் காயாத… ஏகாந்தங்கள் நீயே
மீ மிசையே மிகுமதியே
மார்பினில் மாறாத
வாசங்கள் நீயே
காரிருள் மேலே
விழும் சீர் ஒளி நீயே
உணர்ந்தேனே, உணர்ந்தேனே
உயிரே, ஓ ஓ ஓஓ
Neerkumizho song is from the Kolai, Sid Sriram movie.
Neerkumizho song was sung by Sid Sriram.
Neerkumizho song lyrics were written by Karthik Netha.
Neerkumizho song music was composed by Girishh Gopalakrishnan.