
| Movie Name | In Tamil & English - Takku Mukku Tikku Thalam |
|---|---|
| Director | Thankar Bachan |
| Star Cast | Vijith Bachan, Munishkanth, Milana Nagaraj |
| Music | Dharan Kumar |
| Singer(s) | Sathya Prakash & Sanjana Kalmanje |
| Lyricist | Lalith Anand |
| Music Label | Sony Music South |
இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்
இடைவெளி குறைகிறதே
இதம் இதமாய் இருக்கின்றதே
இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்
தினம் இவள்
பார்வையில் படுவது சுகம்
இது போதுமடி
இதுவரை இருந்திட்ட
தயக்கமும் இதுவா
இதுவரை அறிந்திடா
மயக்கமும் இதுவா
இவள் கிடைத்தாள்
என் துயர் துடைத்தாள்
என் கனவிலும் நினைவிலும்
நிலைத்து விட்டாள்
இவன் முகத்தில்
என் இதழ் பதித்தேன்
என் செருக்குகள் அனைத்தையும்
உடைத்துவிட்டேன்
கல்லாய் நேற்று
தெருவினில் கிடந்தேன்
கண்ணால் பார்த்து
செதுக்கி விட்டாள்
முள்ளாய் நேற்று
தெரிந்தவன் மடியில்
பூவாய் இன்று
தெரிந்து விட்டான்
இரண்டு துருவம் இணையுமா
இணையுதே இனிதாய்
அடி விழலாம் ஓர்
இடி விழலாம்
நான் இவள் தரும் வலி
எனில் பொறுத்திடுவேன்
இவன் மடியில் நான்
விழுந்து விட்டேன்
என் இயல்புகள் முழுவதும்
தொலைத்து விட்டேன்
மாஞ்சா நூலில்
மல்லிகைப் பூ தொடுத்து
ரோஜாவாசம்
கொடுத்து விட்டாள்
செல்லாக்காசு
என இவன் தெரிந்தான்
எல்லாமாக மாறிவிட்டான்
நினைத்ததெல்லாம் நடக்குமா
நடக்குதே எனக்கு
இது என்ன புதுவித அனுபவம்
இவளுக்குள் நடக்குதே அதிசயம்
Idhu Enna song is from the In Tamil & English - Takku Mukku Tikku Thalam movie.
Idhu Enna song was sung by Sathya Prakash & Sanjana Kalmanje.
Idhu Enna song lyrics were written by Lalith Anand.
Idhu Enna song music was composed by Dharan Kumar.