
| Movie Name | In Tamil & English - Annaatthe |
|---|---|
| Director | Siva |
| Star Cast | Rajinikanth, Kushbu, Meena, Nayanthara, Keerthi Suresh |
| Music | D Imman |
| Singer(s) | S P Balasubramanyam |
| Lyricist | Viveka |
| Music Label | Sun TV |
அண்ணாத்தே அண்ணாத்தே
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு, ஹெய்ய ஹெய்ய
அண்ணாத்தே அண்ணாத்தே
வர்றேன் நடையில உடையில
கோல கோல மாஸு, ஹெய்ய ஹெய்ய
கூண்டுல புயலுக்கு வேலையில்ல
தாண்டுவா கடமைகள் காத்திருக்கு
தூண்டில திமிங்கலம் மதிப்பதில்ல
துணிஞ்சு வா கடவுளே துனை நமக்கு
உறுதியுடன் மோது மோது
உலகையே ஜெயிக்கலாம்
உனக்கு இணை ஏது ஏது
வானையும் வளைக்கலாம்
அண்ணாத்த பேசுனா… ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா… ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த பேசுனா… ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா… ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த அண்ணாத்த
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு
ஹெய்ய ஹெய்ய… ஹெய்ய தலைவா
ஹெய்ய தலைவா… ஹெய்ய தலைவா
கீழடிக்கு பக்கத்தூரு
வாரித்தரும் வைகை யாறு
நித்தம் நித்தம் நெல்லுச் சோறு
தாளடிக்கும் களதுல
தப்பிப்போன நெல்லை அள்ளி
பசியாறும் பத்து ஊரு
வேரில் வீரம் தாங்கி ஓங்கி
வாழும் அதிசய நிலமடா
மாரில் ஈட்டி வாங்கி போரில் மோதும்
மறத்தமிழ் இனமடா
பாசக்காரா நேசக்காரா
வேலைக்காரா மூளைக்காரா
மாயக்காரா மச்சக்காரா
காவக்கார வாயா
காலம் வாழ்வில் பொன்னானது
அதை கவனம் வைத்து முன்னேறிடு
ஆசை மிகவும் பொல்லாதது
அதன் காதைத் திருகி கரை சேர்ந்திடு
உலகினில் அழகு எது சொல்லவா
எதிரிக்கும் இறங்கும் குணமல்லவா
உயர்தர வீரம் எது சொல்லவா
சுய தவறுணரும் செயலல்லவா
நெற்றியில வேர்வை வேணும்
நெஞ்சில் நேர்ம வேணும்
மத்ததெல்லாம் எண்ணம் போல
தானா வந்து சேரும்
விறல் பத்து இருக்குது
விடியில எழுப்பிடு
எதற்கும் நீ அஞ்சக்கூடாதே
கனவுகள் நடந்திடும்
அதுவரை வாழ்க்கையில்
நொடியும் நீ துஞ்சக்கூடாதே
அண்ணாத்த பேசுனா… ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா… ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்த பேசுனா… ஸ்டைலு
அண்ணாத்த பாடுனா… ஸ்டைலு
அண்ணாத்த ஆடுனா
கொண்டாட்டம் கொண்டாட்டம் தான்
அண்ணாத்தே அண்ணாத்தே
வர்றேன் அதிரடி சரவெடி
தெருவெங்கும் வீசு, ஹெய்ய ஹெய்ய
அண்ணாத்தே அண்ணாத்தே
வர்றேன் நடையில உடையில
கோல கோல மாஸு, ஹெய்ய ஹெய்ய
அண்ணாத்த மாஸுக்கே மாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
அண்ணாத்த மாஸுக்கே மாஸு
அண்ணாத்த வாக்கிங்கே ரேசு
Annaatthe Annaatthe song is from the In Tamil & English - Annaatthe movie.
Annaatthe Annaatthe song was sung by S P Balasubramanyam.
Annaatthe Annaatthe song lyrics were written by Viveka.
Annaatthe Annaatthe song music was composed by D Imman.